January
ஜனவரி 2021
ஞாயிறு
கெர்போட்ட நிவர்த்தி
இது தமிழர்களின் மழை கணிப்பு முறையை சார்ந்தது.
செவ்வாய்
அனுமன் ஜெயந்தி
இன்று அனுமார் அவதரித்த தினம்.
புதன்
போகிப் பண்டிகை
மார்கழி மாதத்தின் கடைசி நாள். 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நன்னாள் இது.
வியாழன்
தைப் பொங்கல்
தமிழர்களின் திருநாள். விவசாயிகளின் பொன்னாள்.
வெள்ளி
திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல்
இன்று திருவள்ளுவர் அவதரித்த தினம்.
சனி
உழவர் திருநாள், காணும் பொங்கல்
அயராது உழைத்த உழவர்கள். தனக்கு உதவிய கால் நடைகள் உட்பட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள்.
வியாழன்
தைப்பூசம்
முருகனுக்கு விசேஷமான நன்னாள். முருகன் பிறந்த தினமாகவும் இது சொல்லப்படுகிறது.
February
பிப்ரவரி 2021
செவ்வாய்
தியாக பிரம்ம ஆராதனை
தியாகராஜ சுவாமிகள், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இன்று இசைக் கலைஞர்கள் அவரை ஆராதிக்கும் நாள்.
வியாழன்
தை அமாவாசை
இது மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். மூதாதையர்களுக்கு படையல் வைக்கும் நன்னாள்.
வெள்ளி
ரத சப்தமி
இந்த நாளில் சூரிய பகவானை வழிபட செய்த பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் தீரும்.
சனி
மாசி மகம்
மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை.
March
மார்ச் 2021
வியாழன்
மகா சிவராத்திரி
இன்று சிவனுக்காக உண்ணா நோன்பு இருந்து வழிபட்டால் சிவ கதி கிடைக்கும். அதாவது மோக்ஷம் தரும்.
ஞாயிறு
காரடையான் நோன்பு
இது காமாட்சியம்மனை பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். இதனை சாவித்ரி நோம்பு , காமாட்சி விரதம், கவுரி விரதம் எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர்.
ஞாயிறு
பங்குனி உத்திரம், ஹோலிப் பண்டிகை, காமதகனம்
தீமை எரிக்கப்பட்டு நன்மை பிறந்த நாளாக இந்த நாளை வட இந்தியர்கள் கருதுகின்றனர். பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் நன்னாள்.
April
ஏப்ரல் 2021
செவ்வாய்
தெலுங்கு வருடப் பிறப்பு
உகாதி பண்டிகை' என தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டி பேசும் மக்களால் இது கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு இதுவே புத்தாண்டு.
புதன்
தமிழ் வருடப் பிறப்பு
ஆண்டுதோறும் சித்திரையின் முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடுவர். அந்நாள்...இந்நாள்.
புதன்
ஸ்ரீ ராம நவமி
உலக நன்மைக்காக ஸ்ரீ ராமர் அவதரித்த தினம் இன்று.
சனி
ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம்.
திங்கள்
சித்ரா பெளர்ணமி, ஸ்ரீ கள்ளழகர் எதிர் சேவை
தங்கையான மீனாக்ஷியின் திருமணத்தை காண கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை கள்ளழகர் எதிர் சேவை என்கின்றனர்.
செவ்வாய்
ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்
தங்கையான மீனாக்ஷி அம்மனின் திருமணத்தைக் காண, அதில் பங்கு கொள்ள கள்ளழகர் குறுக்கே தடையாக இருக்கும் வைகை ஆற்றை கடக்கும் நிகழ்ச்சியே இது.
May
மே 2021
செவ்வாய்
அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்
இன்றில் இருந்து அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் ஆகிறது.
வெள்ளி
அட்சய திருதியை
இது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள். இன்று தான் பரசுராமர் அவதரித்தார்.
திங்கள்
ஸ்ரீ மத் சங்கர ஜெயந்தி
ஆதி சங்கரர் இன்று தான் அவதரித்தார்.
வெள்ளி
ஸ்ரீ வாசவி ஜெயந்தி
பார்வதி தேவியின் அம்சமான வாசவி தேவி அவதரித்த தினம் இன்று.
செவ்வாய்
வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.
வெள்ளி
அக்னி நக்ஷத்திர நிவர்த்தி
கத்திரி வெயிலாய் இத்தனை நாட்கள் சுட்டெரித்த அக்கினி பகவானுக்கு விடை தரும் நாள் இன்று.
July
ஜூலை 2021
செவ்வாய்
ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். அவர் இன்று அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
வியாழன்
ஆனி உத்திர தரிசனம்
ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ஆனி உத்திரம் என்று பெயர்.
வெள்ளி
சங்கரன் கோவில் தபசு
ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு சொல்ல தேவி பார்வதி தவம் இருந்த தினம். சங்கர நாராயணர் அவதரிக்க காரணமான தினம்.
August
ஆகஸ்ட் 2021
செவ்வாய்
ஆடிப் பெருக்கு
இன்று ஆடி 18 ஆம் நாள். ஆறுகளில் நீராடுவது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
ஞாயிறு
ஆடி அமாவாசை
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினம் இது. இந்த நாளில் இறந்தோருக்குப் பிண்டம் வைப்பது மிக நன்று.
புதன்
திருவாடிப் பூரம்
ஆண்டாள் அவதரித்த நன்னாள். இந்நாள்.
வெள்ளி
கருட பஞ்சமி
கெருட பகவானை வழிபட வேண்டிய சிறப்பான நன்னாள். இந்நாள்.
வெள்ளி
ஸ்ரீ வர லட்சுமி விரதம்
தேவி மகா லக்ஷ்மியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு மரியாதை செலுத்தும் தினம்.
சனி
ஓணம் பண்டிகை
மலையாளிகள் கொண்டாடும் திருநாள். மகா பலி சக்கரவர்த்தி தனது மக்களை காண வருவதாக ஐதீகம்.
ஞாயிறு
ஆவணி அவிட்டம்
இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். பிராமணர்களுக்கு விசேஷமான நாள். பிராமணர் பூணுல் மாற்றும் சடங்கு கொண்டாடப்படுகிறது.
திங்கள்
ஸ்ரீ காயத்ரி ஜபம்
காயத்ரி தேவியை அந்தணர்கள் வழிபடும் தினம்.
புதன்
மகா சங்கடஹர சதுர்த்தி
விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.
திங்கள்
கோகுலாஷ்டமி
ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம் இன்று.
September
செப்டம்பர் 2021
வெள்ளி
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாள் இன்று.
செவ்வாய்
மஹாளய பக்ஷம் ஆரம்பம்
பித்ருக்களுக்கு விசேஷமான தினம் இன்று. பித்ரு தேவதைகளுக்கு தர்ப்பணம், ஹிரண்ய ச்ரார்த்ம், அன்ன ச்ரார்த்தம் ஆகிய இம்மூன்றுக்கள் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும்.
வெள்ளி
மஹா பரணி
எம தர்மனுக்கு உகந்த நாள். இன்று தான் ஆத்மாக்கள் வினைப்படி சொர்க்கம், நரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். யம தீபம் ஏற்றுவது விசேஷம்.
October
அக்டோபர் 2021
புதன்
மகாளய அமாவாசை
இதனை பெரிய அமாவாசை என்பர். பித்ரு காரியங்கள் செய்ய மிகவும் உகந்தது.
வியாழன்
நவராத்திரி ஆரம்பம்
முப்பெரும் சக்திகளை சிறப்பிக்கும் நன்னாள் இன்றில் இருந்து ஆரம்பம்.
வியாழன்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
சரஸ்வதி தேவியை வழிபடும் தினம். வாழ்க்கை போராட்டத்தில் அனுதினமும் நமக்கு உதவும் பொருள்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்.
வெள்ளி
விஜய தசமி
வித்தைகள் மேம்பட புதிய விஷயங்களை துவங்க ஏதுவான நன்னாள்.
November
நவம்பர் 2021
வியாழன்
தீபாவளிப் பண்டிகை, கேதார கௌரி விரதம், கந்த சஷ்டி ஆரம்பம்
தீபங்கள் ஒளி வீச...பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியாய் கொண்டாடும் மாபெரும் விழா.
செவ்வாய்
கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தினம் இன்று.
வெள்ளி
திருக்கார்த்திகை தீபம்
குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்த ஹிந்துக்கள் கொண்டாடும் ஒரு அற்புத தீபத் திருநாள்.
சனி
ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்
குறிப்பாக வைணவ சமயத்தை சார்ந்த ஹிந்துக்கள் கொண்டாடும் ஒரு அற்புத தீபத் திருநாள்.
December
டிசம்பர் 2021
திங்கள்
ஆருத்ரா தரிசனம்
ஸ்ரீ நட ராஜப் பெருமாள் அவதாரம் செய்த தினம் இன்று.
புதன்
கெர் போட்ட ஆரம்பம்
தமிழர்களின் அடுத்த வருட மழைக்கணிப்பு முறைகளில் ஒன்று.