January
ஜனவரி 2022
ஞாயிறு
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி
இன்று அனுமார் அவதரித்த தினம்.
வியாழன்
போகிப் பண்டிகை, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதத்தின் கடைசி நாள். 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நன்னாள் இது.
வெள்ளி
தைப்பொங்கல்
தமிழர்களின் திருநாள். விவசாயிகளின் பொன்னாள்.
சனி
மாட்டுப் பொங்கல், வள்ளுவர் தினம்
உழவர்கள் உழவு மாட்டிற்கு நன்றி செலுத்தும் தினம். இன்று திருவள்ளுவர் அவதரித்த தினம்.
ஞாயிறு
உழவர் திருநாள்
அயராது உழைத்த உழவர்கள். தனக்கு உதவிய கால் நடைகள் உட்பட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள்.
செவ்வாய்
தைப்பூசம்
முருகனுக்கு விசேஷமான நன்னாள். முருகன் பிறந்த தினமாகவும் இது சொல்லப்படுகிறது.
திங்கள்
தை அமாவாஸ்யை
இது மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். மூதாதையர்களுக்கு படையல் வைக்கும் நன்னாள்.
February
பிப்ரவரி 2022
வியாழன்
மாசி மகம்
மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை.
March
மார்ச் 2022
செவ்வாய்
ஸ்ரீ மஹா சிவராத்திரி
இன்று சிவனுக்காக உண்ணா நோன்பு இருந்து வழிபட்டால் சிவ கதி கிடைக்கும். அதாவது மோக்ஷம் தரும்.
வியாழன்
ஹோலிப் பண்டிகை
தீமை அழிய.. நன்மையை வர்ண நிறங்கள் கொண்டு வரவேற்கும் தினம்.
வெள்ளி
பங்குனி உத்திரம்
தீமை எரிக்கப்பட்டு நன்மை பிறந்த நாளாக இந்த நாளை வட இந்தியர்கள் கருதுகின்றனர். பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் நன்னாள்.
April
ஏப்ரல் 2022
சனி
தெலுங்கு வருடப் பிறப்பு
உகாதி பண்டிகை' என தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டி பேசும் மக்களால் இது கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு இதுவே புத்தாண்டு.
ஞாயிறு
ஸ்ரீ ராம நவமி
உலக நன்மைக்காக ஸ்ரீ ராமர் அவதரித்த தினம் இன்று.
வியாழன்
தமிழ் புத்தாண்டு
ஆண்டுதோறும் சித்திரையின் முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடுவர். அந்நாள்...இந்நாள்.
வியாழன்
ஸ்ரீ மீனாக்ஷித் திருக்கல்யாணம்
இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம்.
வெள்ளி
ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை
தங்கையான மீனாக்ஷி அம்மனின் திருமணத்தைக் காண, அதில் பங்கு கொள்ள கள்ளழகர் குறுக்கே தடையாக இருக்கும் வைகை ஆற்றை கடக்கும் நிகழ்ச்சியே இது.
சனி
ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்
தங்கையான மீனாக்ஷி அம்மனின் திருமணத்தைக் காண, அதில் பங்கு கொள்ள கள்ளழகர் குறுக்கே தடையாக இருக்கும் வைகை ஆற்றை கடக்கும் நிகழ்ச்சியே இது.
May
மே 2022
செவ்வாய்
அக்ஷய திருதியை
இது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள். இன்று தான் பரசுராமர் அவதரித்தார்.
புதன்
அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்
அக்னிக் கொழுந்தாய் சூரிய பகவான் பூமியை சுட்டெரிக்கத் தொடங்கும் தினம்.
சனி
அக்னி நக்ஷத்திரம் நிவர்த்தி
கத்திரி வெயிலாய் இத்தனை நாட்கள் சுட்டெரித்த அக்கினி பகவானுக்கு விடை தரும் நாள் இன்று.
June
ஜூன் 2022
ஞாயிறு
வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.
July
ஜூலை 2022
புதன்
ஆனி உத்திர தரிசனம்
ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ஆனி உத்திரம் என்று பெயர்.
August
ஆகஸ்ட் 2022
திங்கள்
திருவாடிப்பூரம்
ஆண்டாள் அவதரித்த நன்னாள். இந்நாள்.
புதன்
ஆடி பதினெட்டாம் பெருக்கு
இன்று ஆடி 18 ஆம் நாள். ஆறுகளில் நீராடுவது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
வெள்ளி
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
தேவி மகா லக்ஷ்மியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு மரியாதை செலுத்தும் தினம்.
புதன்
சங்கரன் கோயில் தபசு
ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு சொல்ல தேவி பார்வதி தவம் இருந்த தினம். சங்கர நாராயணர் அவதரிக்க காரணமான தினம்.
வியாழன்
ஆவணி அவிட்டம்
இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். பிராமணர்களுக்கு விசேஷமான நாள். பிராமணர் பூணுல் மாற்றும் சடங்கு கொண்டாடப்படுகிறது.
திங்கள்
ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி
விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.
வெள்ளி
ஸ்ரீ கோகுலாஷ்டமி
ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம் இன்று.
புதன்
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாள் இன்று.
September
செப்டம்பர் 2022
வியாழன்
ஓணம் பண்டிகை
மலையாளிகள் கொண்டாடும் திருநாள். மகா பலி சக்கரவர்த்தி தனது மக்களை காண வருவதாக ஐதீகம்.
ஞாயிறு
மஹாளய அமாவாஸ்யை
இதனை பெரிய அமாவாசை என்பர். பித்ரு காரியங்கள் செய்ய மிகவும் உகந்தது.
திங்கள்
நவராத்திரி ஆரம்பம்
முப்பெரும் சக்திகளை சிறப்பிக்கும் நன்னாள் இன்றில் இருந்து ஆரம்பம்.
October
அக்டோபர் 2022
செவ்வாய்
சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை
சரஸ்வதி தேவியை வழிபடும் தினம். வாழ்க்கை போராட்டத்தில் அனுதினமும் நமக்கு உதவும் பொருள்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்.
புதன்
விஜயதசமி
வித்தைகள் மேம்பட புதிய விஷயங்களை துவங்க ஏதுவான நன்னாள்.
திங்கள்
தீபாவளிப் பண்டிகை
தீபங்கள் ஒளி வீச...பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியாய் கொண்டாடும் மாபெரும் விழா.
செவ்வாய்
கந்த சஷ்டி ஆரம்பம்
இன்று முதல் கந்த சஷ்டி ஆரம்பம்.
ஞாயிறு
கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தினம் இன்று.
December
டிசம்பர் 2022
செவ்வாய்
திருக்கார்த்திகை
சைவ சமயத்தை சார்ந்த ஹிந்துக்கள் முருகப் பெருமானுக்காக கொண்டாடும் ஒரு அற்புத தீபத் திருநாள்.