2023 Hindu Festivals in Tamil Calendar | இந்து பண்டிகை நாட்கள் - ThiruTamil


Tamil Nadu Time Now : Thu Apr 18 2024 04:24:19 GMT+0530 (India Standard Time)
Go to Year :

இந்து பண்டிகை நாட்கள் ஜனவரி 2023
Hindu Festivals in January 2023

2-1-2023, ஜனவரி 2 , மார்கழி 18, திங்கள்

வைகுண்ட ஏகாதசி

இன்றைய தினத்தில் தான் பரமபதம் எனப்படும் சுவர்க்கத்தின் வாசல் திறக்கும் என்பது வைணவர் நம்பிக்கை
6-1-2023, ஜனவரி 6 , மார்கழி 22, வெள்ளி

ஆருத்திரா தரிசனம்

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் நடராஜரை அல்லது சிவ பெருமானை தரிசித்தல் நன்று.
11-1-2023, ஜனவரி 11 , மார்கழி 27, புதன்

கெர்ப்போட்ட நிவர்த்தி, ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை

கெர்போட்ட நிவர்த்தி என்பது தமிழர்களின் அடுத்த வருட மழை கணிப்பு முறை. இன்று திருவையாற்றில் 'தியாகராஜருக்கு' ஆராதனை விழா நடைபெறுகிறது.
14-1-2023, ஜனவரி 14 , மார்கழி 30, சனி

போகிப் பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி நாள். 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நன்னாள் இது.
15-1-2023, ஜனவரி 15 , தை 1, ஞாயிறு

தை பொங்கல்

தமிழர்களின் திருநாள். விவசாயிகளின் பொன்னாள்.
16-1-2023, ஜனவரி 16 , தை 2, திங்கள்

கனுமாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்

உழவர்கள் உழவு மாட்டிற்கு நன்றி செலுத்தும் தினம். இன்று திருவள்ளுவர் அவதரித்த தினம்.
17-1-2023, ஜனவரி 17 , தை 3, செவ்வாய்

உழவர் திருநாள்

அயராது உழைத்த உழவர்கள். தனக்கு உதவிய கால் நடைகள் உட்பட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். அது தான் உழவர் திருநாள்.
21-1-2023, ஜனவரி 21 , தை 7, சனி

தை அமாவாசை

இன்று தை அமாவாசை. மூதாதையர்களை நினைவு கூறி தர்ப்பணம் செய்வது நல்லது.
28-1-2023, ஜனவரி 28 , தை 14, சனி

ரத சப்தமி

தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏழாம் நாள் வரும் சப்தமி திதியை ரத சப்தமி திதி என கொண்டாடுகிறோம். இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது.

இந்து பண்டிகை நாட்கள் பிப்ரவரி 2023
Hindu Festivals in February 2023

5-2-2023, பிப்ரவரி 5 , தை 22, ஞாயிறு

தைபூசம்

முருகனுக்கு விசேஷமான நன்னாள். முருகன் பிறந்த தினமாகவும் இது சொல்லப்படுகிறது.
18-2-2023, பிப்ரவரி 18 , மாசி 06, சனி

ஸ்ரீ மஹா சிவராத்திரி

இன்று சிவனுக்காக உண்ணா நோன்பு இருந்து வழிபட்டால் சிவ கதி கிடைக்கும். அதாவது மோக்ஷம் தரும். பிறவிப் பிணி நீங்கும். இனி பிறவா வரம் கிடைக்கும்.

இந்து பண்டிகை நாட்கள் மார்ச் 2023
Hindu Festivals in March 2023

6-3-2023, மார்ச் 6 , மாசி 22, திங்கள்

மாசி மகம்

மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை.
7-3-2023, மார்ச் 7 , மாசி 23, செவ்வாய்

ஹோலிப் பண்டிகை

தீமை அழிய.. நன்மையை வர்ண நிறங்கள் கொண்டு வரவேற்கும் தினம். தீமை எரிக்கப்பட்டு நன்மை பிறந்த நாளாக இந்த நாளை வட இந்தியர்கள் கருதுகின்றனர்.
22-3-2023, மார்ச் 22 , பங்குனி 08, புதன்

தெலுங்கு வருடப்பிறப்பு

உகாதி பண்டிகை' என தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டி பேசும் மக்களால் இது கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு இதுவே புத்தாண்டு.
30-3-2023, மார்ச் 30 , பங்குனி 16, வியாழன்

ஸ்ரீ ராம நவமி

உலக நன்மைக்காக ஸ்ரீ ராமர் அவதரித்த தினம் இன்று.

இந்து பண்டிகை நாட்கள் ஏப்ரல் 2023
Hindu Festivals in April 2023

5-4-2023, ஏப்ரல் 5 , பங்குனி 22, புதன்

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் நன்னாள்.
14-4-2023, ஏப்ரல் 14 , சித்திரை 01, வெள்ளி

தமிழ் வருடப் பிறப்பு

ஆண்டுதோறும் சித்திரையின் முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடுவர். அந்நாள்…இந்நாள்.
23-4-2023, ஏப்ரல் 23 , சித்திரை 10, ஞாயிறு

அட்சய திரிதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

இந்து பண்டிகை நாட்கள் மே 2023
Hindu Festivals in May 2023

2-5-2023, மே 2 , சித்திரை 19, செவ்வாய்

ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம்.
4-5-2023, மே 4 , சித்திரை 21, வியாழன்

ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை, அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்

தங்கை மீனாக்ஷி திருக்கல்யாண வைபவத்தை கள்ளழகர் காண உத்தேசித்து புறப்படத் தயார் ஆகிறார். இன்று முதல் அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்.
5-5-2023, மே 5 , சித்திரை 22, வெள்ளி

ஸ்ரீ கள்ளழகர் வைகை எழல்

தங்கையான மீனாக்ஷி அம்மனின் திருமணத்தைக் காண, அதில் பங்கு கொள்ள கள்ளழகர் குறுக்கே தடையாக இருக்கும் வைகை ஆற்றை கடக்கும் நிகழ்ச்சியே இது.
29-5-2023, மே 29 , வைகாசி 15, திங்கள்

அக்னி நக்ஷத்திரம் நிவர்த்தி

இன்றோடு அக்னி நக்ஷத்திரம் நிறைவு பெறுகிறது.

இந்து பண்டிகை நாட்கள் ஜூன் 2023
Hindu Festivals in June 2023

2-6-2023, ஜூன் 2 , வைகாசி 19, வெள்ளி

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.
26-6-2023, ஜூன் 26 , ஆனி 11, திங்கள்

ஆனி உத்திர தரிசனம்

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்து பண்டிகை நாட்கள் ஜூலை 2023
Hindu Festivals in July 2023

22-7-2023, ஜூலை 22 , ஆடி 6, சனி

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்து பண்டிகை நாட்கள் ஆகஸ்ட் 2023
Hindu Festivals in August 2023

1-8-2023, ஆகஸ்ட் 1 , ஆடி 16, செவ்வாய்

சங்கரன் கோயில் தபசு

அம்பாள் ஹரியும், சிவனும் ஒன்று என்னும் தத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள தவம் புரிந்த தினம்.
3-8-2023, ஆகஸ்ட் 3 , ஆடி 18, வியாழன்

ஆடிப் பெருக்கு விழா

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும், கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.
25-8-2023, ஆகஸ்ட் 25 , ஆவணி 08, வெள்ளி

வரலட்சுமி விரதம்

இன்று மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு
29-8-2023, ஆகஸ்ட் 29 , ஆவணி 12, செவ்வாய்

ஓணம் பண்டிகை

இன்று மகாபலி தனது கேரள மக்களை காண வரும் திருநாள்.
30-8-2023, ஆகஸ்ட் 30 , ஆவணி 13, புதன்

ஆவணி அவிட்டம்

இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். பிராமணர்களுக்கு விசேஷமான நாள். பிராமணர் பூணுல் மாற்றும் சடங்கு கொண்டாடப்படுகிறது.

இந்து பண்டிகை நாட்கள் செப்டம்பர் 2023
Hindu Festivals in September 2023

3-9-2023, செப்டம்பர் 3 , ஆவணி 17, ஞாயிறு

ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி

விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.
6-9-2023, செப்டம்பர் 6 , ஆவணி 20, புதன்

கோகுலாஷ்டமி

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம் இன்று.
18-9-2023, செப்டம்பர் 18 , புரட்டாசி 1, திங்கள்

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாள் இன்று.
30-9-2023, செப்டம்பர் 30 , புரட்டாசி 13, சனி

மஹாளய பக்ஷம் ஆரம்பம்

பித்ரு காரியங்கள் செய்ய மிகவும் உகந்தது.

இந்து பண்டிகை நாட்கள் அக்டோபர் 2023
Hindu Festivals in October 2023

14-10-2023, அக்டோபர் 14 , புரட்டாசி 27, சனி

மகாளய அமாவாசை

இதனை பெரிய அமாவாசை என்பர். இன்றைய தினம் பித்ரு காரியங்கள் செய்வது உகந்தது.
15-10-2023, அக்டோபர் 15 , புரட்டாசி 28, ஞாயிறு

நவராத்திரி ஆரம்பம்

முப்பெரும் சக்திகளை சிறப்பிக்கும் நன்னாள் இன்றில் இருந்து ஆரம்பம்.
23-10-2023, அக்டோபர் 23 , ஐப்பசி 06, திங்கள்

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி தேவியை வழிபடும் தினம். வாழ்க்கை போராட்டத்தில் அனுதினமும் நமக்கு உதவும் பொருள்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்.
24-10-2023, அக்டோபர் 24 , ஐப்பசி 07, செவ்வாய்

விஜய தசமி

வித்தைகள் மேம்பட புதிய விஷயங்களை துவங்க ஏதுவான நன்னாள்.

இந்து பண்டிகை நாட்கள் நவம்பர் 2023
Hindu Festivals in November 2023

12-11-2023, நவம்பர் 12 , ஐப்பசி 26, ஞாயிறு

தீபாவளிப் பண்டிகை

தீபங்கள் ஒளி வீச…பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியாய் கொண்டாடும் மாபெரும் விழா.
13-11-2023, நவம்பர் 13 , ஐப்பசி 27, திங்கள்

கந்த சஷ்டி ஆரம்பம்

இன்று முதல் கந்த சஷ்டி ஆரம்பம்.
18-11-2023, நவம்பர் 18 , கார்த்திகை 2, சனி

கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தினம் இன்று
26-11-2023, நவம்பர் 26 , கார்த்திகை 10, ஞாயிறு

திருக்கார்த்திகை

சைவ சமயத்தை சார்ந்த ஹிந்துக்கள் முருகப் பெருமானுக்காக கொண்டாடும் ஒரு அற்புத தீபத் திருநாள்.

இந்து பண்டிகை நாட்கள் டிசம்பர் 2023
Hindu Festivals in December 2023

23-12-2023, டிசம்பர் 23 , மார்கழி 07, சனி

வைகுண்ட ஏகாதசி

இன்றைய தினத்தில் தான் பரமபதம் எனப்படும் சுவர்க்கத்தின் வாசல் திறக்கும் என்பது வைணவர் நம்பிக்கை
27-12-2023, டிசம்பர் 27 , மார்கழி 11, புதன்

ஆருத்திரா தரிசனம்

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் நடராஜரை அல்லது சிவ பெருமானை தரிசித்தல் நன்று.
29-12-2023, டிசம்பர் 29 , மார்கழி 13, வெள்ளி

கெர்போட்ட ஆரம்பம்

கெர்போட்ட நிவர்த்தி அல்லது கெர்போட்ட ஆரம்பம் என்பது தமிழர்களின் அடுத்த வருட மழை கணிப்பு முறை.
இந்து பண்டிகை நாட்கள் 2023 - Hindu Festivals in 2023
கிறிஸ்தவ பண்டிகை நாட்கள் 2023 - Christian Festivals 2023
முஸ்லிம்களின் பண்டிகை நாட்கள் 2023 - Muslim Festivals in 2023
தலைவர்கள் நாட்கள் 2023 - Leaders Days in 2023
நவமி நாட்கள் 2023 - Navami Days in 2023
அஷ்டமி நாட்கள் 2023 - Ashtami Days in 2023
வாஸ்து நாட்கள் 2023 - Vaasthu Dates and Time in 2023
அரசு விடுமுறை நாட்கள் 2023 - Government Holidays at TamilNadu in 2023
திருமண சுப முகூர்த்த நாட்கள் 2023 - Marriage, Muhurtham Dates 2023
முக்கியமான விரத நாட்கள் 2023 - Important Fasting Dates 2023
தமிழ் நாட்காட்டி ஜனவரி 2023 - Tamil Monthly Calendar January 2023
தமிழ் நாட்காட்டி பிப்ரவரி 2023 - Tamil Monthly Calendar February 2023
தமிழ் நாட்காட்டி மார்ச் 2023 - Tamil Monthly Calendar March 2023
தமிழ் நாட்காட்டி ஏப்ரல் 2023 - Tamil Monthly Calendar April 2023
தமிழ் நாட்காட்டி மே 2023 - Tamil Monthly Calendar May 2023
தமிழ் நாட்காட்டி ஜூன் 2023 - Tamil Monthly Calendar June 2023
தமிழ் நாட்காட்டி ஜூலை 2023 - Tamil Monthly Calendar July 2023
தமிழ் நாட்காட்டி ஆகஸ்ட் 2023 - Tamil Monthly Calendar August 2023
தமிழ் நாட்காட்டி செப்டம்பர் 2023 - Tamil Monthly Calendar September 2023
தமிழ் நாட்காட்டி அக்டோபர் 2023 - Tamil Monthly Calendar October 2023
தமிழ் நாட்காட்டி நவம்பர் 2023 - Tamil Monthly Calendar November 2023
தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2023 - Tamil Monthly Calendar December 2023

திருத்தமிழ் காலண்டர்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore