2023 Leaders Dates in Tamil Calendar | தலைவர்கள் நாட்கள் - ThiruTamil


Tamil Nadu Time Now : Tue Apr 16 2024 22:25:25 GMT+0530 (India Standard Time)
Go to Year :

தலைவர்கள் நாட்கள் ஜனவரி 2023
Leaders Dates in January 2023

1-1-2023, ஜனவரி 1 , மார்கழி 17, ஞாயிறு

இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திரநாத் போஸ் பிறந்தார்

சத்தியேந்திர நாத் போசு இந்திய இயற்பியலாளர் ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் 1920களில் குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போசான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது. இன்று சத்தியேந்திர நாத் போசு அவர்களின் பிறந்த தினம்.
3-1-2023, ஜனவரி 3 , மார்கழி 19, செவ்வாய்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்

வீர பாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. பாண்டிய நாட்டிலிருந்து உதவிகோரப்பட்டு, விஜயநகரப் பேரரசின் படைகள் வந்தபின், 3 நாடுகளும் மீண்டும் கைப்பற்றப்பட்டன. பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார். இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்.
4-1-2023, ஜனவரி 4 , மார்கழி 20, புதன்

ஜி.டி. நாயுடு நினைவு தினம்

ஜி.டி. நாயுடு (மார்ச் 23, 1893 - 1974) என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில்எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். இன்று ஜி. டி. நாயுடு நினைவு தினம்.
11-1-2023, ஜனவரி 11 , மார்கழி 27, புதன்

லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார். இன்று லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்.
12-1-2023, ஜனவரி 12 , மார்கழி 28, வியாழன்

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். தேசிய இளைஞர் தினம்.

சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்.
13-1-2023, ஜனவரி 13 , மார்கழி 29, வெள்ளி

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்

ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார். இன்று ராகேஷ் ஷர்மா அவர்களின் பிறந்த தினம்.
15-1-2023, ஜனவரி 15 , தை 1, ஞாயிறு

திருவள்ளுவர் தினம்.

திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று அவர் பிறந்ததாக கருதப்படுகிறது. இன்று திருவள்ளுவர் அவதரித்த தினம்.
17-1-2023, ஜனவரி 17 , தை 3, செவ்வாய்

எம்.ஜி.ஆர். பிறந்த தினம்.

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.இவர் பிறந்த தினம் இன்று.
19-1-2023, ஜனவரி 19 , தை 5, வியாழன்

இந்திய ஆன்மீகவாதி ஓஷோ நினைவு தினம்

ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார். ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர். இன்று ஓஷோ அவர்களின் நினைவு தினம்.
23-1-2023, ஜனவரி 23 , தை 9, திங்கள்

நேதாஜி பிறந்த தினம்

நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. எனினும், இவருக்கு என்ன ஆனது என்பது இன்று வரையில் மர்மமாகவே உள்ளது. இன்று நேதாஜி அவர்களின் பிறந்த தினம்.
24-1-2023, ஜனவரி 24 , தை 10, செவ்வாய்

அணு விஞ்ஞானி ஹோமி பாபா நினைவு தினம்

ஓமி யெகாங்கிர் பாபா, பார்சி சமூகத் இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். இவர் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் பார்சி சமூகத்தினர் ஆவார். இன்று இவர் மறைந்த தினம்.
30-1-2023, ஜனவரி 30 , தை 16, திங்கள்

காந்திஜி அமரத்துவ தினம்.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இன்று இவரது நினைவு தினம்.

தலைவர்கள் நாட்கள் பிப்ரவரி 2023
Leaders Dates in February 2023

1-2-2023, பிப்ரவரி 1 , தை 18, புதன்

விடுதலைப் போராட்ட வீரர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இவரது பிறந்த தினம் இன்று.
3-2-2023, பிப்ரவரி 3 , தை 20, வெள்ளி

அண்ணா நினைவு நாள்

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். இன்று அவரது நினைவு தினம்.
6-2-2023, பிப்ரவரி 6 , தை 23, திங்கள்

மோதிலால் நேரு நினைவு தினம்

மோதிலால் நேரு ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார். இன்று மோதிலால் நேரு நினைவு தினம்.
11-2-2023, பிப்ரவரி 11 , தை 28, சனி

ஜி. யூ. போப் நினைவு தினம்

ஜி. யு. போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இன்று ஜி.யு.போப் நினைவு தினம்.
12-2-2023, பிப்ரவரி 12 , தை 29, ஞாயிறு

ஆபிரஹாம் லிங்கன் பிறந்த நாள்.

ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். இன்று இவரது பிறந்த தினம்.
13-2-2023, பிப்ரவரி 13 , மாசி 1, திங்கள்

கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தினம்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அவரது பிறந்த தினம்.
16-2-2023, பிப்ரவரி 16 , மாசி 4, வியாழன்

இந்தியத் திரையுலகின் தந்தை தாதா சாஹெப் பால்கே நினைவு தினம்

தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இன்று அவரது நினைவு தினம்.
18-2-2023, பிப்ரவரி 18 , மாசி 6, சனி

ராம கிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். இன்று அவரது பிறந்த தினம்.
19-2-2023, பிப்ரவரி 19 , மாசி 7, ஞாயிறு

சத்ரபதி சிவாஜி பிறந்த தினம்

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். போன்சலே மராத்திய குலத்தவரான சாகாஜிபோன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். இன்று சத்ரபதி சிவாஜி பிறந்த தினம்.
22-2-2023, பிப்ரவரி 22 , மாசி 10, புதன்

கஸ்தூரி பாய் நினைவு நாள்

கஸ்தூரிபாய் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர். இன்று கஸ்தூரிபாய் அவர்களின் நினைவு நாள்.
24-2-2023, பிப்ரவரி 24 , மாசி 12, வெள்ளி

செல்வி ஜெ. ஜெயலிதா பிறந்த நாள்.

செல்வி. ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார். இன்று இவரது பிறந்த நாள்.

தலைவர்கள் நாட்கள் மார்ச் 2023
Leaders Dates in March 2023

2-3-2023, மார்ச் 2 , மாசி 18, வியாழன்

சரோஜினி நாயுடு நினைவு நாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா, அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள்.
11-3-2023, மார்ச் 11 , மாசி 27, சனி

அலெக்ஸ்சாண்டர் பிளெமிங் நினைவு நாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். இன்று அலெக்சாண்டர் பிளெமிங் அவர்களின் நினைவு நாள்.
12-3-2023, மார்ச் 12 , மாசி 28, ஞாயிறு

ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம்

ஏர்ல் நைட்டிங்கேல் என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்வாய்த வானொலி பேச்சாளர், எழுத்தாளர், பேச்சாளர், மெய்யியலாளர் ஆவார். இவரது படைப்புகள் பெரும்பாலும் மனிதத்தன்மை மேம்பாடு, ஊக்கமூட்டல் ஆகியவற்றை அடிப்படையாக அமைந்தவை ஆகும். இவரது புத்தகங்கள் மற்றும் ஒலிப் புத்தகங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளன. இன்று அவரது பிறந்த தினம்.
13-3-2023, மார்ச் 13 , மாசி 29, திங்கள்

தமிழறிஞர் கா. நமச்சிவாயம் நினைவு தினம்

பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர். இவரது நினைவு தினம் இன்று.
18-3-2023, மார்ச் 18 , பங்குனி 4, சனி

டீசல் இன்ஜினைக் கண்டு பிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார். இன்று டீசல் இன்ஜினைக் கண்டு பிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
22-3-2023, மார்ச் 22 , பங்குனி 8, புதன்

திரு. டி. வி. சுந்தரம் ஐயங்கார் பிறந்த தினம்

T V சுந்தரம் அய்யங்கார் எனப் பரவலாக அறியப்படும் இவர் மற்றும் இந்தியாவின் பெரிய பல்துறை தொழிலகங்களில் ஒன்றான டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்சு குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். தொடக்கத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்ந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே. இன்று இன்னாரது பிறந்த தினம்.
23-3-2023, மார்ச் 23 , பங்குனி 9, வியாழன்

பகத் சிங் நினைவு நாள்

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இன்று அவரது நினைவு நாள்.

தலைவர்கள் நாட்கள் ஏப்ரல் 2023
Leaders Dates in April 2023

2-4-2023, ஏப்ரல் 2 , பங்குனி 19, ஞாயிறு

வ.வே.சு. ஐயர் பிறந்த தினம்

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இன்று அவரது பிறந்த தினம்.
3-4-2023, ஏப்ரல் 3 , பங்குனி 20, திங்கள்

சத்ரபதி சிவாஜி நினைவு நாள்

சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே, மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். போன்சலே மராத்திய குலத்தவரான சாகாஜிபோன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். இவர் மராட்டிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர். இன்று அவரது நினைவு நாள்.
4-4-2023, ஏப்ரல் 4 , பங்குனி 21, செவ்வாய்

மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்

மார்டின் லூதர் கிங், இளையவர் ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். இன்று இவரது நினைவு தினம்.
6-4-2023, ஏப்ரல் 6 , பங்குனி 23, வியாழன்

இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் பிறந்த தினம்.

கோ. நம்மாழ்வார், தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். இன்று அவரது பிறந்த தினம்.
6-4-2023, ஏப்ரல் 6 , பங்குனி 23, வியாழன்

மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார். இன்று அவரது பிறந்த தினம்.
8-4-2023, ஏப்ரல் 8 , பங்குனி 25, சனி

மங்கள் பாண்டே நினைவு நாள்.

மங்கள் பாண்டே, என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். இன்று மங்கள் பாண்டே அவர்களின் நினைவு நாள்.
8-4-2023, ஏப்ரல் 8 , பங்குனி 25, சனி

பக்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு தினம்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா, ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். இன்று அவரது நினைவு தினம்.
10-4-2023, ஏப்ரல் 10 , பங்குனி 27, திங்கள்

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நினைவு தினம்

மொரார்சி ரன்சோதிசி தேசாய், இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வெளியேறி பின்பு காங்கிரஸ் கட்சியில் அன்னை இந்திரா காந்தியின் வாரிசு அரசியலையும், பல அதிகார மீறல் செயல்களையும், அவர் அப்போது கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் முதல் எதிர்கட்சியான ஜனதா கட்சியில் பிரதமர் ஆனார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. இன்று முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நினைவு தினம்.
14-4-2023, ஏப்ரல் 14 , சித்திரை 1, வெள்ளி

டாக்டர். அம்பேத்கார் பிறந்த நாள்.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இன்று அவரது பிறந்த தினம்.
15-4-2023, ஏப்ரல் 15 , சித்திரை 2, சனி

ஆபிரகாம் லிங்கன் நினைவு தினம்

ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். இன்று அவரது நினைவு தினம்.
16-4-2023, ஏப்ரல் 16 , சித்திரை 3, ஞாயிறு

சார்லி சாப்ளின் பிறந்த தினம்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின், என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. இன்று சார்லி சாப்ளின் பிறந்த தினம்.
17-4-2023, ஏப்ரல் 17 , சித்திரை 4, திங்கள்

டாக்டர். ராதா கிருஷ்ணன் நினைவு தினம்.

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர். இன்று டாக்டர். ராதா கிருஷ்ணன் நினைவு தினம்.
17-4-2023, ஏப்ரல் 17 , சித்திரை 4, திங்கள்

தீரன் சின்னமலை பிறந்த தினம்

தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர். இன்று தீரன் சின்னமலை பிறந்த தினம்.
18-4-2023, ஏப்ரல் 18 , சித்திரை 5, செவ்வாய்

ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் நினைவு தினம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் நினைவு தினம்.
19-4-2023, ஏப்ரல் 19 , சித்திரை 6, புதன்

சார்லஸ் டார்வின் நினைவு தினம்

சார்லஸ் ராபர்ட் டார்வின், ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. இன்று சார்லஸ் டார்வின் நினைவு தினம்.
20-4-2023, ஏப்ரல் 20 , சித்திரை 7, வியாழன்

ஹிட்லர் பிறந்த தினம்

அடால்ஃப் இட்லர், ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. இன்று ஹிட்லர் பிறந்த தினம்.
21-4-2023, ஏப்ரல் 21 , சித்திரை 8, வெள்ளி

பாரதிதாசன் நினைவு நாள்

பாரதிதாசன் பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இன்று பாரதிதாசன் நினைவு நாள்.
23-4-2023, ஏப்ரல் 23 , சித்திரை 10, ஞாயிறு

வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்

வில்லியம் சேக்சுபியர், ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது. இன்று வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்.
24-4-2023, ஏப்ரல் 24 , சித்திரை 11, திங்கள்

ஜி. யு. போப் பிறந்த தினம்

ஜி. யு. போப், கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இன்று ஜி. யு. போப் பிறந்த தினம்.
25-4-2023, ஏப்ரல் 25 , சித்திரை 12, செவ்வாய்

வானொலி கண்டுபிடித்த மார்கோனி பிறந்த தினம்

மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இன்று வானொலி கண்டுபிடித்த மார்கோனி பிறந்த தினம்.
26-4-2023, ஏப்ரல் 26 , சித்திரை 13, புதன்

கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம்

சீனிவாச இராமானுஜன், இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். இன்று கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம்.
28-4-2023, ஏப்ரல் 28 , சித்திரை 15, வெள்ளி

உ. வே. சாமிநாத ஐயர் நினைவு நாள்

உ. வே. சாமிநாதையர், உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதைச் சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் 'தமிழ்த் தாத்தா' எனத் தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டார். இவர் ஒரு தமிழறிஞர். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். இன்று உ. வே. சாமிநாத ஐயர் நினைவு நாள்.
29-4-2023, ஏப்ரல் 29 , சித்திரை 16, சனி

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்.

பாரதிதாசன், பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்.
29-4-2023, ஏப்ரல் 29 , சித்திரை 16, சனி

ஓவியர் இரவிவர்மா பிறந்த தினம்

ராஜா ரவி வர்மா நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். இன்று ஓவியர் இரவிவர்மா பிறந்த தினம்.
30-4-2023, ஏப்ரல் 30 , சித்திரை 17, ஞாயிறு

ஹிட்லர் நினைவு தினம்.

அடால்ஃப் இட்லர், ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இன்று ஹிட்லர் நினைவு தினம்.
30-4-2023, ஏப்ரல் 30 , சித்திரை 17, ஞாயிறு

இந்தியத் திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே பிறந்த தினம்

தாதாசாகெப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இன்று இந்தியத் திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே பிறந்த தினம்.

தலைவர்கள் நாட்கள் மே 2023
Leaders Dates in May 2023

2-5-2023, மே 2 , சித்திரை 19, செவ்வாய்

இந்தியத் திரையுலக மேதை சத்யஜித் ராய் பிறந்த தினம்

சத்யஜித் ராய், இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர். திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார். இவர் புனைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் ஆவார். இன்று இவரது பிறந்த தினம்.
3-5-2023, மே 3 , சித்திரை 20, புதன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் நினைவு தினம்

சாகிர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். இன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் அவர்களின் நினைவு தினம்.
5-5-2023, மே 5 , சித்திரை 22, வெள்ளி

கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்.

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். இன்று கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்.
5-5-2023, மே 5 , சித்திரை 22, வெள்ளி

மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்.

நெப்போலியன் பொனபார்ட் அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். இன்று மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்.
6-5-2023, மே 6 , சித்திரை 23, சனி

மோதிலால் நேரு பிறந்த தினம்

மோதிலால் நேரு, ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார். இன்று மோதிலால் நேரு பிறந்த தினம்.
7-5-2023, மே 7 , சித்திரை 24, ஞாயிறு

ரபீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்

இரவீந்தரநாத் தாகூர், புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இன்று ரபீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.
9-5-2023, மே 9 , சித்திரை 26, செவ்வாய்

கோபால கிருஷ்ண கோகுலே பிறந்த நாள்

கோபால கிருஷ்ண கோகலே , இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். இன்று கோபால கிருஷ்ண கோகுலே பிறந்த நாள்.
21-5-2023, மே 21 , வைகாசி 7, ஞாயிறு

இராஜீவ் காந்தி நினைவு தினம்

ராசீவ் காந்தி, இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இன்று இராஜீவ் காந்தி நினைவு தினம்.
22-5-2023, மே 22 , வைகாசி 8, திங்கள்

இராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம்

இராசாராம் மோகன்ராய் வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்மசமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். இன்று இராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம்.
27-5-2023, மே 27 , வைகாசி 13, சனி

நேரு நினைவு நாள்

சவகர்லால் நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று நேரு நினைவு நாள்.

தலைவர்கள் நாட்கள் ஜூன் 2023
Leaders Dates in June 2023

3-6-2023, ஜூன் 3 , வைகாசி 20, சனி

கலைஞர் மு. கருணாநிதி பிறந்த தினம்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969-இல் முதன்முறையாகத் தமிழக முதல்வரானார். மே 13, 2006-இல் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம்.ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்று கலைஞர் மு. கருணாநிதி பிறந்த தினம்.
4-6-2023, ஜூன் 4 , வைகாசி 21, ஞாயிறு

வ.வே.சு. ஐயர் நினைவு தினம்

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இன்று வ.வே.சு. ஐயர் நினைவு தினம்.
5-6-2023, ஜூன் 5 , வைகாசி 22, திங்கள்

காயிதே மில்லத் பிறந்த நாள்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். இன்று காயிதே மில்லத் பிறந்த நாள்.
14-6-2023, ஜூன் 14 , வைகாசி 31, புதன்

சே குவரோ பிறந்த தினம்

சே குவேரா, அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். இன்று சே குவரோ பிறந்த தினம்.
16-6-2023, ஜூன் 16 , ஆனி 1, வெள்ளி

சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு. இன்று சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்.
17-6-2023, ஜூன் 17 , ஆனி 2, சனி

வாஞ்சிநாதன் நினைவு தினம்

வாஞ்சிநாதன், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். இன்று வாஞ்சிநாதன் நினைவு தினம்.
18-6-2023, ஜூன் 18 , ஆனி 3, ஞாயிறு

ராணி லட்சுமி பாய் நினைவு தினம்

இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி, வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர். இன்று ராணி லட்சுமி பாய் நினைவு தினம்.
25-6-2023, ஜூன் 25 , ஆனி 10, ஞாயிறு

வி.பி.சிங் பிறந்த தினம்

விஸ்வநாத் பிரதாப் சிங், இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். இன்று வி.பி.சிங் பிறந்த தினம்.
26-6-2023, ஜூன் 26 , ஆனி 11, திங்கள்

ம. பொ. சிவஞானம் பிறந்த தினம்

ம. பொ. சிவஞானம், 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். இன்று ம. பொ. சிவஞானம் பிறந்த தினம்.
28-6-2023, ஜூன் 28 , ஆனி 13, புதன்

முன்னாள் பிரதமர் பி. நரசிம்ம ராவ் பிறந்த தினம்

பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர். இன்று முன்னாள் பிரதமர் பி. நரசிம்ம ராவ் பிறந்த தினம்.
30-6-2023, ஜூன் 30 , ஆனி 15, வெள்ளி

தாதாபாய் நௌரோஜி நினைவு தினம்

தாதாபாய் நௌரோஜி, இந்தியாவின், அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய கால கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது. இன்று தாதாபாய் நௌரோஜி நினைவு தினம்.

தலைவர்கள் நாட்கள் ஜூலை 2023
Leaders Dates in July 2023

1-7-2023, ஜூலை 1 , ஆனி 16, சனி

முன்னாள் இந்திய பிரதமர் சந்திர சேகர் பிறந்த தினம்

முன்னாள் இந்திய பிரதமர் சந்திர சேகர் இன்று தான் பிறந்தது. இவர் நவம்பர் 10, 1990 – ஜூன் 21, 1991 வரையில் பிரதமராக இருந்தார்.
2-7-2023, ஜூலை 2 , ஆனி 17, ஞாயிறு

விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம்

மயில்சாமி அண்ணாதுரை தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார் . இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார், அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும். இன்று மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம்.
4-7-2023, ஜூலை 4 , ஆனி 19, செவ்வாய்

சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.

சுவாமி விவேகானந்தர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.
15-7-2023, ஜூலை 15 , ஆனி 30, சனி

காமராஜர் பிறந்த நாள்.

காமராசர், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். இன்று காமராஜர் பிறந்த நாள்.
15-7-2023, ஜூலை 15 , ஆனி 30, சனி

தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பிறந்த தினம்

மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
18-7-2023, ஜூலை 18 , ஆடி 2, செவ்வாய்

நெல்சன் மண்டேலா பிறந்த தினம்

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இன்று நெல்சன் மண்டேலா பிறந்த தினம்.
19-7-2023, ஜூலை 19 , ஆடி 3, புதன்

மங்கள் பாண்டே பிறந்த நாள்

மங்கள் பாண்டே என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். மங்கள் பாண்டே பிறந்த நாள்.
22-7-2023, ஜூலை 22 , ஆடி 6, சனி

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு தினம்

முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இன்று டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு தினம்.
23-7-2023, ஜூலை 23 , ஆடி 7, ஞாயிறு

பால கங்காதர திலகர் பிறந்த தினம்.

பால கங்காதர திலகர் சூலை 23, 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இன்று பால கங்காதர திலகர் பிறந்த தினம்.
23-7-2023, ஜூலை 23 , ஆடி 7, ஞாயிறு

சுப்பிரமணிய சிவா நினைவு தினம்

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். இன்று பால கங்காதர திலகர் பிறந்த தினம், சுப்பிரமணிய சிவா நினைவு தினம்.
27-7-2023, ஜூலை 27 , ஆடி 11, வியாழன்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு தினம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். இன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு தினம்.
30-7-2023, ஜூலை 30 , ஆடி 14, ஞாயிறு

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தினம்

முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இன்று டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தினம்.
31-7-2023, ஜூலை 31 , ஆடி 15, திங்கள்

தீரன் சின்னமலை நினைவு தினம்

தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர். இன்று தீரன் சின்னமலை நினைவு தினம்.

தலைவர்கள் நாட்கள் ஆகஸ்ட் 2023
Leaders Dates in August 2023

1-8-2023, ஆகஸ்ட் 1 , ஆடி 16, செவ்வாய்

விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் நினைவு தினம்

பால கங்காதர திலகர், சூலை 23, 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இன்று விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் நினைவு தினம்.
4-8-2023, ஆகஸ்ட் 4 , ஆடி 19, வெள்ளி

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்

பராக் உசைன் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். இன்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்.
6-8-2023, ஆகஸ்ட் 6 , ஆடி 21, ஞாயிறு

அலெக்ஸ்சாண்டர் ஃபிளமிங் பிறந்த தினம்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். இன்று அலெக்ஸ்சாண்டர் ஃபிளமிங் பிறந்த தினம்.
7-8-2023, ஆகஸ்ட் 7 , ஆடி 22, திங்கள்

திரு.ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்.

இரவீந்தரநாத் தாகூர், புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இன்று திரு.ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்.
7-8-2023, ஆகஸ்ட் 7 , ஆடி 22, திங்கள்

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நினைவு தினம்

முத்துவேல் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969-இல் முதன்முறையாகத் தமிழக முதல்வரானார். மே 13, 2006-இல் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நினைவு தினம்.
10-8-2023, ஆகஸ்ட் 10 , ஆடி 25, வியாழன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி. கிரி பிறந்த தினம்

வி. வி. கிரி என்றழைக்கப்பெற்ற வராககிரி வேங்கட கிரி (10 ஆகஸ்ட் 1894 - 24 சூன் 1980) இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார். இன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி. கிரி பிறந்த தினம்.
12-8-2023, ஆகஸ்ட் 12 , ஆடி 27, சனி

திரு. விக்ரம் சாராபாய் பிறந்த தினம்

விக்கிரம் அம்பாலால் சாராபாய், என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இன்று திரு. விக்ரம் சாராபாய் பிறந்த தினம்.
13-8-2023, ஆகஸ்ட் 13 , ஆடி 28, ஞாயிறு

சோம்நாத் சாட்டர்ஜி நினைவு தினம்

சோம்நாத் சட்டர்ஜி, இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். 14 ஆவது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர். இவர் அந்த காலகட்டத்தில், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இன்று சோம்நாத் சாட்டர்ஜி நினைவு தினம்.
14-8-2023, ஆகஸ்ட் 14 , ஆடி 29, திங்கள்

வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம்

வேதாத்திரி மகரிஷி, ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர். இன்று வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம்.
16-8-2023, ஆகஸ்ட் 16 , ஆடி 31, புதன்

ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.இன்று ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்.
16-8-2023, ஆகஸ்ட் 16 , ஆடி 31, புதன்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம்

அடல் பிகாரி வாச்பாய் 1996 ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். இன்று அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம்.
18-8-2023, ஆகஸ்ட் 18 , ஆவணி 1, வெள்ளி

சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள்

நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இன்று சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள்.
19-8-2023, ஆகஸ்ட் 19 , ஆவணி 2, சனி

விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம்

சத்தியமூர்த்தி ஓர் காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.இன்று விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம்.
20-8-2023, ஆகஸ்ட் 20 , ஆவணி 3, ஞாயிறு

திரு. ராஜீவ் காந்தி பிறந்த நாள்.

ராசீவ் காந்தி, இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இன்று திரு. ராஜீவ் காந்தி பிறந்த நாள்.
21-8-2023, ஆகஸ்ட் 21 , ஆவணி 4, திங்கள்

பொதுவுடைமைவாதி ப. ஜீவானந்தம் பிறந்த தினம்

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். இன்று பொதுவுடைமைவாதி ப. ஜீவானந்தம் பிறந்த தினம்
26-8-2023, ஆகஸ்ட் 26 , ஆவணி 9, சனி

அன்னை தெரசா பிறந்த தினம்

அன்னை தெரேசா, அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். இன்று அன்னை தெரசா பிறந்த தினம்.
26-8-2023, ஆகஸ்ட் 26 , ஆவணி 9, சனி

திரு. வி. கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். இன்று திரு. வி. கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்.
27-8-2023, ஆகஸ்ட் 27 , ஆவணி 10, ஞாயிறு

மவுண்ட் பேட்டன் பிரபு நினைவு தினம்

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன், பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். இன்று மவுண்ட் பேட்டன் பிரபு நினைவு தினம்.
30-8-2023, ஆகஸ்ட் 30 , ஆவணி 13, புதன்

கலைவாணர் ஏன். எஸ். கே. நினைவு நாள்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். இன்று கலைவாணர் ஏன். எஸ். கே. நினைவு நாள்.
31-8-2023, ஆகஸ்ட் 31 , ஆவணி 14, வியாழன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நினைவு தினம்

பிரணப் குமார் முகர்ஜி, இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நினைவு தினம்.

தலைவர்கள் நாட்கள் செப்டம்பர் 2023
Leaders Dates in September 2023

1-9-2023, செப்டம்பர் 1 , ஆவணி 15, வெள்ளி

புலித்தேவர் பிறந்த தினம்

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இன்று புலித்தேவர் பிறந்த தினம்.
4-9-2023, செப்டம்பர் 4 , ஆவணி 18, திங்கள்

தாதாபாய் நௌரோஜி பிறந்த தினம்

தாதாபாய் நௌரோஜி, இந்தியாவின், அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய கால கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்று தாதாபாய் நௌரோஜி பிறந்த தினம்.
5-9-2023, செப்டம்பர் 5 , ஆவணி 19, செவ்வாய்

அன்னை தெரசா நினைவு நாள்

அன்னை தெரசா சமூகப் பணியாளர். இன்று அன்னை தெரசா நினைவு நாள்.
5-9-2023, செப்டம்பர் 5 , ஆவணி 19, செவ்வாய்

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
5-9-2023, செப்டம்பர் 5 , ஆவணி 19, செவ்வாய்

வ. உ. சிதம்பரனார் பிறந்த தினம்.

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். இன்று வ. உ. சிதம்பரனார் பிறந்த தினம்.
6-9-2023, செப்டம்பர் 6 , ஆவணி 20, புதன்

இந்திய விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திர போஸ் பிறந்த தினம்

சரத் சந்திர போசு என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கியவர். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாசு சந்திர போசின் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது. இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திர போஸ் பிறந்த தினம்.
11-9-2023, செப்டம்பர் 11 , ஆவணி 25, திங்கள்

மகாகவி பாரதியார் நினைவு நாள்.

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். இன்று மகாகவி பாரதியார் நினைவு நாள்.
15-9-2023, செப்டம்பர் 15 , ஆவணி 29, வெள்ளி

அறிஞர் அண்ணா பிறந்த தினம்

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். இன்று அறிஞர் அண்ணா பிறந்த தினம்.
17-9-2023, செப்டம்பர் 17 , ஆவணி 31, ஞாயிறு

தந்தை பெரியார் பிறந்த நாள்

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி ஒரு சமூக சீர்திருத்தவாதி. இன்று தந்தை பெரியார் பிறந்த நாள்.
17-9-2023, செப்டம்பர் 17 , ஆவணி 31, ஞாயிறு

திரு. வி. கலியாண சுந்தரனார் நினைவு தினம்

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். இன்று தந்தை பெரியார் பிறந்த நாள், திரு. வி. கலியாண சுந்தரனார் நினைவு தினம்.
20-9-2023, செப்டம்பர் 20 , புரட்டாசி 3, புதன்

அன்னி பெசன்ட் அம்மையார் நினைவு தினம்

அன்னி வூட் பெசண்ட் என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். இன்று அன்னி பெசன்ட் அம்மையார் நினைவு தினம்.
22-9-2023, செப்டம்பர் 22 , புரட்டாசி 5, வெள்ளி

மைக்கேல் பாரடே பிறந்த தினம்

மைக்கேல் பரடே பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
22-9-2023, செப்டம்பர் 22 , புரட்டாசி 5, வெள்ளி

குரு நானக் தேவ் நினைவு தினம்

குரு நானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்.இவர் கபீரின் உற்ற சீடர் ஆவார். இன்று மைக்கேல் பாரடே பிறந்த தினம், குரு நானக் தேவ் நினைவு தினம்.
26-9-2023, செப்டம்பர் 26 , புரட்டாசி 9, செவ்வாய்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்

மன்மோகன் சிங் இந்தியாவின் 13 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார்.
26-9-2023, செப்டம்பர் 26 , புரட்டாசி 9, செவ்வாய்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர்.
27-9-2023, செப்டம்பர் 27 , புரட்டாசி 10, புதன்

தமிழர் தந்தை ஆதித்தனார் பிறந்த தினம்

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தமிழர் தந்தை ஆதித்தனார் பிறந்த தினம்.
28-9-2023, செப்டம்பர் 28 , புரட்டாசி 11, வியாழன்

விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்

பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்.

தலைவர்கள் நாட்கள் அக்டோபர் 2023
Leaders Dates in October 2023

1-10-2023, அக்டோபர் 1 , புரட்டாசி 14, ஞாயிறு

அன்னி பெசண்ட் அம்மையார் பிறந்த தினம்

அன்னி வூட் பெசண்ட் என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். இன்று அன்னி பெசண்ட் அம்மையார் பிறந்த தினம்.
2-10-2023, அக்டோபர் 2 , புரட்டாசி 15, திங்கள்

திரு. லால்பகதூர் சாஸ்த்திரி பிறந்த நாள்

லால் பகதூர் சாஸ்திரி, இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
2-10-2023, அக்டோபர் 2 , புரட்டாசி 15, திங்கள்

காந்திஜி பிறந்த நாள்.

காந்திஜி இந்தியாவின் தேசத் தந்தை.
2-10-2023, அக்டோபர் 2 , புரட்டாசி 15, திங்கள்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்

காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
2-10-2023, அக்டோபர் 2 , புரட்டாசி 15, திங்கள்

தினமலர் நிறுவனர். டி.வி. ராமசுப்பு அய்யர் பிறந்த நாள்

தினமலர் நிறுவனர். டி.வி. ராமசுப்பு அய்யர் பிறந்த நாள்.
3-10-2023, அக்டோபர் 3 , புரட்டாசி 16, செவ்வாய்

ம. பொ. சிவஞானம் நினைவு தினம்

ம. பொ. சிவஞானம், 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். இன்று ம. பொ. சிவஞானம் நினைவு தினம்.
4-10-2023, அக்டோபர் 4 , புரட்டாசி 17, புதன்

திருப்பூர் குமரன் பிறந்த தினம்

திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார்.
4-10-2023, அக்டோபர் 4 , புரட்டாசி 17, புதன்

சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். இன்று திருப்பூர் குமரன் பிறந்த தினம், சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்.
5-10-2023, அக்டோபர் 5 , புரட்டாசி 18, வியாழன்

வடலூர் வள்ளலார் பிறந்த தினம்

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். இன்று வடலூர் வள்ளலார் பிறந்த தினம்.
8-10-2023, அக்டோபர் 8 , புரட்டாசி 21, ஞாயிறு

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்.
9-10-2023, அக்டோபர் 9 , புரட்டாசி 22, திங்கள்

சே குவேரா நினைவு தினம்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (சூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.
15-10-2023, அக்டோபர் 15 , புரட்டாசி 28, ஞாயிறு

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள்.

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள்.
16-10-2023, அக்டோபர் 16 , புரட்டாசி 29, திங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்.
18-10-2023, அக்டோபர் 18 , ஐப்பசி 1, புதன்

தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்

தாமசு ஆல்வா எடிசன், ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். இன்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்.
24-10-2023, அக்டோபர் 24 , ஐப்பசி 7, செவ்வாய்

மருது பாண்டியர்கள் நினைவு தினம்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.இன்று மருது பாண்டியர்கள் நினைவு தினம்.
25-10-2023, அக்டோபர் 25 , ஐப்பசி 8, புதன்

ஓவியர் பிக்காஸோ பிறந்த தினம்

பாப்லோ பிக்காசோ என்பவர்எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், மேடை வடிவமைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் ஆவார். இன்று ஓவியர் பிக்காஸோ பிறந்த தினம்.
26-10-2023, அக்டோபர் 26 , ஐப்பசி 9, வியாழன்

ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்

இலரி டயான் ரோட்டம் கிளின்டன் என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்ணாக 1993 முதல் 2000 வரையும், மேலவை உறுப்பினராக 2001 முதல் 2009 வரையும் 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009 முதல் 2013 வரையும் பொறுப்பு வகித்துள்ளார். இன்று ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்.
30-10-2023, அக்டோபர் 30 , ஐப்பசி 13, திங்கள்

பசும்பொன் தேவர் பிறந்த தினம்

முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். இன்று பசும்பொன் தேவர் பிறந்த தினம்.
31-10-2023, அக்டோபர் 31 , ஐப்பசி 14, செவ்வாய்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்

சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இன்று சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்.
31-10-2023, அக்டோபர் 31 , ஐப்பசி 14, செவ்வாய்

இந்திரா காந்தி நினைவு தினம்

இந்திரா காந்தி, இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு.

தலைவர்கள் நாட்கள் நவம்பர் 2023
Leaders Dates in November 2023

5-11-2023, நவம்பர் 5 , ஐப்பசி 19, ஞாயிறு

சுதந்திரப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர். இன்று இவரது பிறந்த தினம்.
7-11-2023, நவம்பர் 7 , ஐப்பசி 21, செவ்வாய்

சர்.சி.வி.ராமன் பிறந்த நாள்.

சர் சந்திரசேகர வெங்கட ராமன் பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இன்று சர்.சி.வி.ராமன் பிறந்த நாள்.
8-11-2023, நவம்பர் 8 , ஐப்பசி 22, புதன்

வீரமாமுனிவர் பிறந்த நாள்.

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.
11-11-2023, நவம்பர் 11 , ஐப்பசி 25, சனி

அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம்

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது, இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இன்று அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம்.
14-11-2023, நவம்பர் 14 , ஐப்பசி 28, செவ்வாய்

பண்டித நேருஜி பிறந்த நாள் குழந்தைகள் தினம்

சவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். நேரு பிறந்த நாளே குழந்தைகள் தினமாகப் போற்றப்படுகிறது.
14-11-2023, நவம்பர் 14 , ஐப்பசி 28, செவ்வாய்

குருநானக் ஜெயந்தி.

குரு நானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்.இவர் கபீரின் உற்ற சீடர் ஆவார்.
17-11-2023, நவம்பர் 17 , கார்த்திகை 1, வெள்ளி

லாலா லஜபதி ராய் நினைவு தினம்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இன்று லாலா லஜபதி ராய் நினைவு தினம்.
18-11-2023, நவம்பர் 18 , கார்த்திகை 2, சனி

வ.உ.சி. நினைவு நாள்.

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இன்று வ.உ.சி. நினைவு நாள்.
19-11-2023, நவம்பர் 19 , கார்த்திகை 3, ஞாயிறு

அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள்.

இந்திரா காந்தி, இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு. இன்று அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள்.
21-11-2023, நவம்பர் 21 , கார்த்திகை 5, செவ்வாய்

சர்.சி.வி. இராமன் நினைவு தினம்

சர் சந்திரசேகர வெங்கட ராமன், பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இன்று சர்.சி.வி. இராமன் நினைவு தினம்.
22-11-2023, நவம்பர் 22 , கார்த்திகை 6, புதன்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் பிறந்த தினம்

இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்திலே, ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார்.ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன. இவரது பிறந்த தினம் இன்று.
23-11-2023, நவம்பர் 23 , கார்த்திகை 7, வியாழன்

சுரதா பிறந்த தினம்

சுரதா, இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
23-11-2023, நவம்பர் 23 , கார்த்திகை 7, வியாழன்

ஜெகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம்

சர் ஜகதீஷ் சந்திர போஸ், தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். இன்று சர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம்.
28-11-2023, நவம்பர் 28 , கார்த்திகை 12, செவ்வாய்

ஜோதிராவ் புலே நினைவு நாள்

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர். இன்று அன்னாரது நினைவு நாள்.
30-11-2023, நவம்பர் 30 , கார்த்திகை 14, வியாழன்

ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம்

சர் ஜகதீஷ் சந்திர போஸ், தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. இன்று ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம்.

தலைவர்கள் நாட்கள் டிசம்பர் 2023
Leaders Dates in December 2023

2-12-2023, டிசம்பர் 2 , கார்த்திகை 16, சனி

பாண்டித்துரை தேவர் நினைவு தினம்

பாண்டித்துரைத் தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். இன்று அன்னாரது நினைவு தினம்.
3-12-2023, டிசம்பர் 3 , கார்த்திகை 17, ஞாயிறு

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இன்று அன்னாரது பிறந்த தினம்.
4-12-2023, டிசம்பர் 4 , கார்த்திகை 18, திங்கள்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினம்

இரா. வெங்கட்ராமன் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
5-12-2023, டிசம்பர் 5 , கார்த்திகை 19, செவ்வாய்

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவு தினம்

ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இன்று அன்னாரது நினைவு தினம்.
6-12-2023, டிசம்பர் 6 , கார்த்திகை 20, புதன்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். இன்று அன்னாரது நினைவு தினம்.
10-12-2023, டிசம்பர் 10 , கார்த்திகை 24, ஞாயிறு

இராஜாஜி பிறந்த தினம்

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
11-12-2023, டிசம்பர் 11 , கார்த்திகை 25, திங்கள்

மகாகவி பாரதியார் பிறந்த தினம்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
15-12-2023, டிசம்பர் 15 , கார்த்திகை 29, வெள்ளி

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்

சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இன்று அன்னாரது நினைவு தினம்.
18-12-2023, டிசம்பர் 18 , மார்கழி 2, திங்கள்

ஆறுமுக நாவலர் பிறந்த தினம்

ஆறுமுக நாவலர், தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
18-12-2023, டிசம்பர் 18 , மார்கழி 2, திங்கள்

ஜெ. ஜெ. தாம்சன் பிறந்த தினம்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இன்று அன்னாரது பிறந்த தினம்.
19-12-2023, டிசம்பர் 19 , மார்கழி 3, செவ்வாய்

இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் பிறந்த தினம்

பிரதிபா தேவிசிங் பாட்டில், இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இன்று அன்னாரது பிறந்த தினம்.
22-12-2023, டிசம்பர் 22 , மார்கழி 6, வெள்ளி

கணிதமேதை இராமானுஜன் பிறந்த தினம்

சீனிவாச இராமானுஜன், இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். இன்று அன்னாரது பிறந்த தினம்.
23-12-2023, டிசம்பர் 23 , மார்கழி 7, சனி

கக்கன் நினைவு தினம்

பி. கக்கன், விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். இன்று அன்னாரது நினைவு தினம்.
24-12-2023, டிசம்பர் 24 , மார்கழி 8, ஞாயிறு

எம்.ஜி.ஆர். நினைவு நாள்.

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். இன்று அன்னாரது நினைவு தினம்.
24-12-2023, டிசம்பர் 24 , மார்கழி 8, ஞாயிறு

ஈ.வே.ரா பெரியார் நினைவு நாள்

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி, சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இன்று அன்னாரது நினைவு தினம்.
25-12-2023, டிசம்பர் 25 , மார்கழி 9, திங்கள்

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்

அடல் பிகாரி வாச்பாய், 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
25-12-2023, டிசம்பர் 25 , மார்கழி 9, திங்கள்

மூதறிஞர் இராஜாஜி நினைவு நாள்

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். இன்று அன்னாரது நினைவு தினம்.
27-12-2023, டிசம்பர் 27 , மார்கழி 11, புதன்

லூயி பாஸ்டர் பிறந்த தினம்

இலூயி பாசுச்சர், நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இன்று லூயி பாஸ்டர் பிறந்த தினம்.
27-12-2023, டிசம்பர் 27 , மார்கழி 11, புதன்

கெப்ளர் பிறந்த தினம்

யோகான்னசு கெப்லர், ஓர் செருமானியக் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இன்று அன்னாரது பிறந்த தினம்.
28-12-2023, டிசம்பர் 28 , மார்கழி 12, வியாழன்

திருபாய் அம்பானி பிறந்த தினம்

திருபாய் என்று அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி, இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் தனது உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்கினார். அம்பானி தனது (ரிலையன்ஸ்) நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக்கினார். 2007 வாக்கில் குடும்பத்தின் இணைந்த சொத்துக்கள் (மகன்கள் அனில் மற்றும் முகேஷ் ஆகிய இருவருடையதும்) 60 பில்லியன் டாலர்களாக இருந்தது. அம்பானிகள் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தனர்.இன்று அன்னாரது பிறந்த தினம்.
30-12-2023, டிசம்பர் 30 , மார்கழி 14, சனி

இரமண மகரிஷி பிறந்த தினம்

இரமண மகரிசி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும். இன்று அன்னாரது பிறந்த தினம்.
31-12-2023, டிசம்பர் 31 , மார்கழி 15, ஞாயிறு

தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பிறந்த தினம்

ச. வே. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இன்று அன்னாரது பிறந்த தினம்.
இந்து பண்டிகை நாட்கள் 2023 - Hindu Festivals in 2023
கிறிஸ்தவ பண்டிகை நாட்கள் 2023 - Christian Festivals 2023
முஸ்லிம்களின் பண்டிகை நாட்கள் 2023 - Muslim Festivals in 2023
தலைவர்கள் நாட்கள் 2023 - Leaders Days in 2023
நவமி நாட்கள் 2023 - Navami Days in 2023
அஷ்டமி நாட்கள் 2023 - Ashtami Days in 2023
வாஸ்து நாட்கள் 2023 - Vaasthu Dates and Time in 2023
அரசு விடுமுறை நாட்கள் 2023 - Government Holidays at TamilNadu in 2023
திருமண சுப முகூர்த்த நாட்கள் 2023 - Marriage, Muhurtham Dates 2023
முக்கியமான விரத நாட்கள் 2023 - Important Fasting Dates 2023
தமிழ் நாட்காட்டி ஜனவரி 2023 - Tamil Monthly Calendar January 2023
தமிழ் நாட்காட்டி பிப்ரவரி 2023 - Tamil Monthly Calendar February 2023
தமிழ் நாட்காட்டி மார்ச் 2023 - Tamil Monthly Calendar March 2023
தமிழ் நாட்காட்டி ஏப்ரல் 2023 - Tamil Monthly Calendar April 2023
தமிழ் நாட்காட்டி மே 2023 - Tamil Monthly Calendar May 2023
தமிழ் நாட்காட்டி ஜூன் 2023 - Tamil Monthly Calendar June 2023
தமிழ் நாட்காட்டி ஜூலை 2023 - Tamil Monthly Calendar July 2023
தமிழ் நாட்காட்டி ஆகஸ்ட் 2023 - Tamil Monthly Calendar August 2023
தமிழ் நாட்காட்டி செப்டம்பர் 2023 - Tamil Monthly Calendar September 2023
தமிழ் நாட்காட்டி அக்டோபர் 2023 - Tamil Monthly Calendar October 2023
தமிழ் நாட்காட்டி நவம்பர் 2023 - Tamil Monthly Calendar November 2023
தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2023 - Tamil Monthly Calendar December 2023

திருத்தமிழ் காலண்டர்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore