Selected Year 2026

Hindu Festivals

இந்து பண்டிகை நாட்கள் 2026

1

January

ஜனவரி 2026

3 ஜனவரி 3
மார்கழி 19

சனி

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம், சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாடு.

11 ஜனவரி 11
மார்கழி 27

ஞாயிறு

கெர்போட்ட நிவர்த்தி

கெர்போட்ட நிவர்த்தி என்பது தமிழர்களின் அடுத்த வருட மழை கணிப்பு முறை.

14 ஜனவரி 14
மார்கழி 30

புதன்

போகிப் பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி நாள். 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நன்னாள் இது.

15 ஜனவரி 15
தை 1

வியாழன்

தைப் பொங்கல்

தமிழர்களின் திருநாள். விவசாயிகளின் பொன்னாள்.

16 ஜனவரி 16
தை 2

வெள்ளி

மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்

உழவர்கள் உழவு மாட்டிற்கு நன்றி செலுத்தும் தினம். இன்று திருவள்ளுவர் அவதரித்த தினம்.

17 ஜனவரி 17
தை 3

சனி

உழவர் திருநாள்

அயராது உழைத்த உழவர்கள். தனக்கு உதவிய கால் நடைகள் உட்பட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். அது தான் உழவர் திருநாள்.

18 ஜனவரி 18
தை 4

ஞாயிறு

தை அமாவாசை

இன்று தை அமாவாசை. மூதாதையர்களை நினைவு கூறி தர்ப்பணம் செய்வது நல்லது.

25 ஜனவரி 25
தை 11

ஞாயிறு

ரத ஸப்தமி

தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏழாம் நாள் வரும் சப்தமி திதியை ரத சப்தமி திதி என கொண்டாடுகிறோம். இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது.

2

February

பிப்ரவரி 2026

1 பிப்ரவரி 1
தை 18

ஞாயிறு

தைப்பூசம்

முருகனுக்கு விசேஷமான நன்னாள். முருகன் பிறந்த தினமாகவும் இது சொல்லப்படுகிறது.

15 பிப்ரவரி 15
மாசி 3

ஞாயிறு

ஸ்ரீ மஹா சிவராத்திரி

இன்று சிவனுக்காக உண்ணா நோன்பு இருந்து வழிபட்டால் சிவ கதி கிடைக்கும். அதாவது மோக்ஷம் பெறலாம். பிறவிப் பிணி நீங்கி, பிறவா வரம் கிடைக்கும்.

3

March

மார்ச் 2026

2 மார்ச் 2
மாசி 18

திங்கள்

மாசி மகம்

மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை.

3 மார்ச் 3
மாசி 19

செவ்வாய்

ஹோலிப் பண்டிகை

தீமை அழிய, நன்மையை வர்ண நிறங்கள் கொண்டு வரவேற்கும் தினம். தீமை எரிக்கப்பட்டு நன்மை பிறந்த நாளாக இந்த நாளை வட இந்தியர்கள் கருதுகின்றனர்.

14 மார்ச் 14
மாசி 30

சனி

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் மணமாகாத பெண்கள் தங்களின் வருங்கால கணவர்களின் நலனுக்காக நடத்தும் திருவிழாவாகும்.

19 மார்ச் 19
பங்குனி 5

வியாழன்

யுகாதி பண்டிகை, தெலுங்கு வருடப்பிறப்பு

'உகாதி பண்டிகை' என தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டி பேசும் மக்களால் இது கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு இதுவே புத்தாண்டு.

27 மார்ச் 27
பங்குனி 13

வெள்ளி

ஸ்ரீ ராம நவமி

உலக நன்மைக்காக ஸ்ரீ ராமர் அவதரித்த தினம் இன்று.

4

April

ஏப்ரல் 2026

1 ஏப்ரல் 1
பங்குனி 18

புதன்

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் நன்னாள்.

14 ஏப்ரல் 14
சித்திரை 1

செவ்வாய்

தமிழ் வருடப் பிறப்பு

ஆண்டுதோறும் சித்திரையின் முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

20 ஏப்ரல் 20
சித்திரை 7

திங்கள்

அட்சய திரிதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

26 ஏப்ரல் 26
சித்திரை 13

ஞாயிறு

ஸ்ரீ வாஸவி ஜெயந்தி

இந்த மாதத்தில் வரும் தசமி திதியானது ஸ்ரீ வாசவி ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது.

28 ஏப்ரல் 28
சித்திரை 15

செவ்வாய்

ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம்.

30 ஏப்ரல் 30
சித்திரை 17

வியாழன்

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை

ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த தினம். தங்கை மீனாக்ஷி திருக்கல்யாண வைபவத்தை கள்ளழகர் காண உத்தேசித்து புறப்படத் தயார் ஆகிறார்.

5

May

மே 2026

1 மே 1
சித்திரை 18

வெள்ளி

சித்ரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா, ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்

தங்கையான மீனாக்ஷி அம்மனின் திருமணத்தைக் காண, அதில் பங்கு கொள்ள கள்ளழகர் குறுக்கே தடையாக இருக்கும் வைகை ஆற்றை கடக்கும் நிகழ்ச்சியே இது.

4 மே 4
சித்திரை 21

திங்கள்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

இன்று முதல் அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம். சித்திரை மாதத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம்.

28 மே 28
வைகாசி 14

வியாழன்

அக்னி நட்சத்திரம் நிவர்த்தி

இன்றோடு அக்னி நக்ஷத்திரம் நிறைவு பெறுகிறது.

30 மே 30
வைகாசி 16

சனி

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.

6

June

ஜூன் 2026

22 ஜூன் 22
ஆனி 8

திங்கள்

ஆனி உத்திர தரிசனம்

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.

7

July

ஜூலை 2026

29 ஜூலை 29
ஆடி 13

புதன்

சங்கரன் கோவில் ஆடி தபசு

அம்பாள் ஹரியும், சிவனும் ஒன்று என்னும் தத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள தவம் புரிந்த தினம்.

8

August

ஆகஸ்ட் 2026

3 ஆகஸ்ட் 3
ஆடி 18

திங்கள்

ஆடி 18ம் பெருக்கு

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும், கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.

14 ஆகஸ்ட் 14
ஆடி 29

வெள்ளி

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

17 ஆகஸ்ட் 17
ஆடி 32

திங்கள்

கருட பஞ்சமி

கெருட பஞ்சமி பெருமாளுடைய பெரிய திருவடி என்று சொல்லக்கூடிய கருட பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள்.

21 ஆகஸ்ட் 21
ஆவணி 4

வெள்ளி

ஸ்ரீ வரலட்சுமி விரதம்

இன்று மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.

26 ஆகஸ்ட் 26
ஆவணி 9

புதன்

ஓணம் பண்டிகை

இன்று மகாபலி தனது கேரள மக்களை காண வரும் திருநாள்.

27 ஆகஸ்ட் 27
ஆவணி 10

வியாழன்

ஆவணி அவிட்டம்

இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். பிராமணர்களுக்கு விசேஷமான நாள். பிராமணர் பூணுல் மாற்றும் சடங்கு கொண்டாடப்படுகிறது.

28 ஆகஸ்ட் 28
ஆவணி 11

வெள்ளி

காயத்திரி ஜபம்

காயத்திரி ஜபம் காயத்திரி தேவிக்காக அற்பணிக்கப்பட்ட நாள் ஆகும்.

31 ஆகஸ்ட் 31
ஆவணி 14

திங்கள்

ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி

விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.

9

September

செப்டம்பர் 2026

4 செப்டம்பர் 4
ஆவணி 18

வெள்ளி

கோகுலாஷ்டமி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம் இன்று.

14 செப்டம்பர் 14
ஆவணி 28

திங்கள்

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாள் இன்று.

10

October

அக்டோபர் 2026

10 அக்டோபர் 10
புரட்டாசி 23

சனி

மஹாளய அமாவாசை

இதனை பெரிய அமாவாசை என்பர். இன்றைய தினம் பித்ரு காரியங்கள் செய்வது உகந்தது.

11 அக்டோபர் 11
புரட்டாசி 24

ஞாயிறு

நவராத்திரி ஆரம்பம்

முப்பெரும் சக்திகளை சிறப்பிக்கும் நன்னாள் இன்றில் இருந்து ஆரம்பம்.

19 அக்டோபர் 19
ஐப்பசி 2

திங்கள்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

சரஸ்வதி தேவியை வழிபடும் தினம். வாழ்க்கை போராட்டத்தில் அனுதினமும் நமக்கு உதவும் பொருள்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்.

20 அக்டோபர் 20
ஐப்பசி 3

செவ்வாய்

விஜயதசமி

வித்தைகள் மேம்பட புதிய விஷயங்களை துவங்க ஏதுவான நன்னாள்.

11

November

நவம்பர் 2026

8 நவம்பர் 8
ஐப்பசி 22

ஞாயிறு

தீபாவளி பண்டிகை

தீபங்கள் ஒளி வீச, பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியாய் கொண்டாடும் மாபெரும் விழா.

10 நவம்பர் 10
ஐப்பசி 24

செவ்வாய்

கந்த சஷ்டி ஆரம்பம்

இன்று முதல் கந்த சஷ்டி ஆரம்பம்.

15 நவம்பர் 15
ஐப்பசி 29

ஞாயிறு

கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தினம் இன்று.

24 நவம்பர் 24
கார்த்திகை 8

செவ்வாய்

திருக்கார்த்திகை தீபம், ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்

சைவ சமயத்தை சார்ந்த ஹிந்துக்கள் முருகப் பெருமானுக்காக கொண்டாடும் ஒரு அற்புத தீபத் திருநாள். மகா விஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றி, உலகத்தை காத்த தினத்தை விஷ்ணு கார்த்திகை என வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் ஏற்றப்படும் தீபத்திற்கு ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம் என்று பெயர்.

12

December

டிசம்பர் 2026

20 டிசம்பர் 20
மார்கழி 5

ஞாயிறு

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது.

24 டிசம்பர் 24
மார்கழி 9

வியாழன்

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம், சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாடு.